மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!
குற்றவாளிகளை கண்டுபிடிக்க முன்பெல்லாம் தொலைபேசியை ஒட்டுக் கேட்பார்கள். இப்போது அவர்கள் தங்களின் தொடர்பு தளங்களை மாற்றி வருவதால் அரசுகளும் புது முயற்சிகளை எடுத்து வருகின்றன.இங்கிலாந்து அரசு கேட்டுக்கொண்ட ” இனி இங்கிலாந்தில் வாசிக்கும் விக்கி பயனாளார்கள் ஏதேனும் சந்தேகிக்கும் படியான பக்கங்களை (வெடி பொருட்களை செய்வது எப்படி, கொலை செய்வது, தற்கொலை) படித்தால் அவர் பற்றிய தகவல்கள் இனி இங்கிலாந்து காவல் துரைக்கு (துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும்”
எனும் விதியை திரு. ஜிம்மி வெல்ஸ் (Wikipedia Fouder) அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார். நீங்கள் ஒரு வேளை கண்டிப்பாக எமது பயனாளார்கள் எந்தப் பக்கத்தை பார்க்கிறார்கள் என விரும்பி உங்களின் இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISPs like Airtel/BSNL in England) அழுத்தம் கொடுத்தால்; நான் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணர்களுக்கும் Encrypt செய்யப்பட்ட பக்கங்களை கொடுத்து உங்களின் ISP எவரும் பார்த்தால் Wikipedia.org என்று மட்டுமே தெரியும்., விளக்கமாக அது எந்தப் பக்கம் என தெரிய வராது. என இங்கிலாந்து அரசை எதிர்த்துள்ளார்.
இது மட்டுமல்ல., அமெரிக்கர்களின் Facebook Chat செய்திகளையும் அமெரிக்க அரசு உளவு பார்த்து வருகிறது. Facebook இல் இருக்கும் சிறார்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்க.. எவரேனும் குறைந்த வயது கொண்ட ஆண் / பெண் பயனாளார்களிடம் தொடர்ந்து Chat செய்தால் அவர் பாலியல் குற்றவாளியாக இருக்கலாம் என அமெரிக்க அரசு சந்தேகிக்கிறது.
வரவிருக்கும் புதிய உளவு முறைகள்:
மின்னஞ்சல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட இருக்கின்றன. உண்மையிலேயே குற்றவாளிகள் மட்டும் உளவு பார்க்கப்பட்டால் பரவா இல்லை.. அனைத்து அரசுகளும் அனைத்து மக்களின் நடவடிக்கைகளையும் உளவு பார்க்க விரும்புகின்றன.
ஒரு வேலை பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுமென்றால்., அவர்களுக்கு பாதுகாப்பு இருந்தும் பயனில்லை.
0 Comments