நம்மை அடிமைப்படுத்திய பரங்கியர் இப்போது Facebookஇன் அடிமைகள்.
Facebook பயன்படுத்தும் இங்கிலாந்து நாட்டவர்களில் ஒன்பதில் ஒருவர் தினமும் எட்டு மணிநேரம் Facebook தளத்தை பயன்படுத்துவதாகவும். சுமார் 20 முறையாவது தமது கணக்கை திறந்து பார்க்கிறார்கள் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக பெண்கள், தங்களின் சக தோழிகள் தம்மை ஏளனம் செய்யும் வகையில் உள்ள புகைப்படங்களை வெளியிடுவது; தம் வாழ்வில் உள்ள கவலைகளில் மிக முக்கியமான கவலை எனத் தெரிவித்துள்ளனர்.
38 சதவீத இளம் பயணர்கள், தங்களை சம்பந்தம் இல்லாத புகைப்படங்களில் கோர்த்துவிடுவது (Photo Tagging) மிகவும் எரிச்சலடையச் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐந்தில் ஒருவர், தமது நிலைத் தகவல்கள் தமது வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும் வசதியாகவும் இருப்பதாக கொஞ்சம் மிகைப்படுதியே பதிவுகள் போடுவதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.
நம்ம ஊர்ல இப்படி ஒரு ஆய்வு நடந்தால் என்ன மாதிரி முடிவுகள் வரும்?
0 Comments