இப்போது இதன் மேல்புறம் உள்ள Options Bar -ல் உள்ள Tolerance -ஐ நீங்கள் எவ்வளவு வைக்கின்றீர்களோ அந்த அளவிற்கு நிறத்தை தேர்வு செய்யும். இனி வரும்
பாடங்களில் இந்த டூல் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.
இப்போது போட்டாஷாப்பில் பல வண்ண நிறங்களை தேர்வு செய்துள்ளேன். இதில் நாம் முதலில் சிகப்பு நிறத்தை தேர்வு செய்யலாம். Tolerance -சுமார் 25 வைத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
சிகப்பு நிறம் மட்டும் சரியாக தேர்வாகிஉள்ளது. அதே டூல்
கொண்டு Tolerance -50 ஆக தேர்வு செய்தபோது வரும் படத்தை கீ்ழே பாருங்கள்.
இதைப்போலவே Tolerance 75 வைத்த படம் கீழே:-
சுமார் 100 வைத்து தேர்வு செய்த படம் கீ்ழே:-
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால் ஒரு நிறத்தை தேர்வு செய்யும் சமயம் குறைவான அளவு Tolerance வைத்தால் அந்த நிறம் எங்குஉள்ளதே அதுமட்டும் தேர்வாகும். Tolerance அதிகமாக வைக்கும் சமயம்
நாம் தேர்வு செய்யும் நிறத்தை சார்ந்துள்ள நிறமும் தேர்
வாகும். உதாரணத்திற்கு இங்கு தஞ்சாவூர் கோயிலின்
பின்புறம் உள்ள வானத்தின் நிறத்தை தேர்வு செய்து டெலிட்
செய்தபின் Backround கலராக நீங்கள் எதை தேர்வு செய்து
உள்ளீர்களோ அந்த நிறம் வந்துவிடும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
பின்புற நிறம் நீல கலரை தேர்வு செய்துள்ளேன். படம் கீழே:
கோபுரத்தின் பின்புறம் நிறம் மஞ்சள் நிறம் மாற்றி உள்ளேன்.படம் கீழே:-
0 Comments