உங்கள் கூகுள் கணக்கின் பாதுகாப்பை பலப்படுத்து​வதற்கு

தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல பயனுள்ள விடங்கள் கிடைக்கப் பெறுகின்ற போதிலும், அவற்றின் கூடவே தீங்கான விளைவுகளும் சேர்ந்து கொள்கின்றன.

இப்படியான தீங்கான விடயங்கள் அதிகளவில் இணையம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. உதாரணமாக கூகுள் கணக்குகள் திருடப்படுதல், பேஸ்புக் கணக்குகள், கடவுச்சொற்கள் திருடப்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

எனினும் தற்போது அவற்றைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை ஒவ்வொரு நிறுவனமும் அறிமுகப்படுத்திவரும் அதே சயமத்தில் கூகுள் நிறுவனமும் இரண்டு படிமுறைகளைக் கொண்ட சரிபார்ப்பு முறை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

கைபேசி இலக்கம், மீட்பு மின்னஞ்சல் முகவரி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட இம்முறை மூலம் திருடப்பட்ட கணக்குகளை சுலபமாக மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைச் செயற்படுத்துவதற்கு https://www.google.com/settings/security?tab=4 என்ற இணைப்பக்கத்திற்கு சென்று செயற்படக்கூடிய கைபேசி இலக்கம், பாவனையிலுள்ள பிறிதொரு மின்னஞ்சல் முகவரி என்பனவற்றை உட்செலுத்தி மாற்றங்களை சேமிக்கவும்.
http://www.youtube.com/watch?v=zMabEyrtPRg&hd=1

Post a Comment

0 Comments