யாகூ இணையத்தள பயனாளர்களின் கடவுச்சொற்கள் திருட்டு

இணையத்தளங்களில் பயனாளர்களின் இரகசியத் தகவல்களை திருடுவது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபலமான யாகூ இணையத்தளத்தில் சுமார் 4 லட்சத்து 53 ஆயிரம் பேரின் கடவுச் சொற்கள் திருடப்பட்டு உள்ளன.

இது பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது எப்படி நடந்தது? யார் திருடினார்கள்? என்று தெரியவில்லை என யாகூ இணையத்தளம் கூறியுள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தில் இங்கிலாந்து தலைமை அலுவலக நிர்வாகி பி.ஆர்.கரோலின் மோக்லியோட் ஸ்மித் கூறுகையில், இச்சம்பவம் நடந்தது உண்மை தான். அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்க இயலாது என்றார்.

Post a Comment

0 Comments