சோனியின் புதிய டேப்லட் குறித்த படங்கள் வெளியானது

சோனி நிறுவனம் C6603 Yuga என்ற புதிய டேப்லட்டை தயாரித்து வருகின்றது.

இதுவரையில் இந்த டேப்லட் குறித்து ரகசியம் காத்து வந்தது சோனி. ஆனால் தற்போது ஜேர்மனியை சேர்ந்த இணையத்தளம் ஒன்று C6603 Yuga டேப்லட்டின் படங்களை தனது இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த டேப்லட் 5 இன்ச் அளவிலான Display-யுடன் வருகின்றது. மேலும் இதில் 1.5 Gigahertz Quadcore Processor, 2GB RAM போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் இந்த டேப்லட் Android 4.1.1 இயங்குதளத்தில் வருவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிப்ரவரி 2013ஆம் ஆண்டில் பர்சலோனாவில் நடைபெறும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் இந்த பேப்லெட் களமிறங்கும் என்று நம்பப்படுகிறது.




முகப்பு 

Post a Comment

0 Comments