கணனி மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
[ திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012, 01:09.56 பி.ப GMT ]
கணனி பாவனையாளர்கள் அனைவரும் தனக்கென தனி இரகசிய குறியீடுகளை வைத்திருப்பர்.

ஆனால் இதனை அறிந்து கொண்டு ஒருவரின் தகவல்களை அறியவும், மோசடி செய்யவும் அதிகளவு வாய்ப்பு உண்டு.

இதனை தடுப்பதற்காக தற்போது புதிய நவீன தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது.

அதாவது கணனியில் குறித்த பாவனையாளர்களின் கண் கருவிழி படலங்களின் பார்வை இரகசிய குறியீடாக பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய முறையை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான்மார்கோ பல்கலைகழகத்தை சேர்ந்த கணனி விஞ்ஞானி ஓலெக் கொமோ, கோர்ட்சேவ் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் கூறுகையில், ஒரு பொருளை இரண்டு பேர் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. ஒவ்வொருவரின் பார்வையும் பல கோணங்களாக தான் இருக்கும். எனவே ஒருவரின் தகவல்களை திருடுவது என்பது முடியாத ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.

இத்தொழில்நுட்பம் விரைவில் அமுலுக்கு வரவுள்ளது.

Post a Comment

0 Comments