அடுத்த ஆண்டு வெளியாகுமா அப்பிளின் ஐபோன் 5s?

அப்பியின் புதிய பதிப்பான ஐபோன் 5 அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தது.

இந்நிலையில் அந்நிறுவனமானது அடுத்த ஸ்மார்ட் போனை தயாரிக்கும் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு ஐபோன் 5s என பெயரிட்டுள்ளதாகவும், சோதனை தயாரிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் வணிக நோக்கிலான தயாரிப்பு அடுத்த வருடம் முதற்காலாண்டு பகுதியில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜூன் அல்லது செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments