Samsung தயாரிப்பில் உருவாகும் I9260 Galaxy Premier கைப்பேசிகள்

கைப்பேசி உலகில் தற்போது தொடர்ச்சியாக தனது புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனம் தற்போது I9260 Galaxy Premier கைப்பேசிகளை தயாரித்துவருகின்றது.

கூகுளின் அன்ரோயிட் 4.1 ஜெல்லிபீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இக்கைப்பேசிகள் 1280 x 720 Pixels Resolutionயை கொண்டதும் 4.65 அங்குல அளவுடையதுமான முற்றிலும் தொடுதிரை வசதியினைக் கொண்டிருக்கின்றன.

இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல புரோசசரினையும், பிரதான நினைவகமாக 1GB RAM இனையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளில் 8 மெகாபிக்சல்கள் கொண்ட அதிநவீன கமெராவும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் துணை நினைவகமானது 16GB காணப்படுகின்றபோதிலும் microSD card மூலம் அவற்றின் அளவை அதிகரித்துக்கொள்ள முடியும்.




 

Post a Comment

0 Comments