பாதுகாப்பு செய்தி
ஜிமெயில் கணக்கை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு

நமது மின்னஞ்சல் கணக்கில் நாம் பல தகவல்களை வைத்து இருப்போம்.இந்த தகவல்களை யாரும் ஹேக் செய்யாமல் இருப்பதற்கு, பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் Alternative Log In id கொடுத்து வைக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
வரும் பக்கத்தில் Security என்பதை கிளிக் செய்து, பின்னர் Account Recover Options என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது வரும் பக்கத்தில் Alternate email address என்ற பகுதியில் தான், உங்களது மற்றொரு மின்னஞ்சல் கணக்கை கொடுக்க வேண்டும். (குறிப்பு- ஜிமெயில் கணக்கு தவிர மற்றவை) அதன் பின் Save என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் கொடுத்த Alternative Email முகவரி கணக்கில் நுழைந்து, கூகுள் அனுப்பி உள்ள Email Verification மின்னஞ்சலை Accept செய்ய வேண்டும்.
இதை கிளிக் செய்த உடன் "Associated Email Address Verified " என்று வந்துவிடும்.
இனி நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைய உங்களின் Alternative Email Address மற்றும் உங்கள் ஜிமெயில் கடவுச்சொல் கொடுத்து நுழையலாம்.

Post a Comment

0 Comments