விண்டோஸ் 8-யை நிறுவிய பின்னர் பழைய விண்டோஸ் Files-களை நீக்குவதற்கு
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான விண்டோஸ் 8, மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது.

பயனாளர்கள் விண்டோஸ் 8-யை நேரடியாக Upgrade செய்தால், பழைய இயங்குதளத்திற்கான Files-கள் அனைத்தும் அப்படியே இருக்கும்.

இந்த Files அனைத்தும் Windows.old என்ற கோப்பறையில் இருக்கும்.

இதனை முழுமையாக கணனியில் இருந்து நீக்குவதற்கு,

Windows.old போல்டரை நீக்குவது எப்படி?

1. உங்கள் கணினியில் Windows Key + R-யை அழுத்தி Run ஐ ஓபன் செய்யுங்கள்.

2. இப்போது cleanmgr என்று டைப் செய்து Disk Clean Up ஐ ஓபன் செய்யவும்.

3. இயங்குதளம் நிறுவியுள்ள Drive பெயரை தெரிவு செய்து (பெரும்பாலும் C Drive) Next கொடுக்கவும். அடுத்த விண்டோவில் Clean Up System Files என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்போது Files To Delete பகுதியில் Previous Windows installation என்பது தெரிவு செய்யப்படாமல் இருந்தால் தெரிவு செய்து OK கொடுங்கள்.

5. அவ்வளவு தான் File - கள் சில நிமிடங்களில் நீக்கப்பட்டு விடும்.





Post a Comment

0 Comments