கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு


ஒன்லைனில் காணப்படும் PDF கோப்புக்களை பார்வையிடுவதற்கு கூகுள் குரோம் உலாவியில் Chrome PDF Viewer வசதி காணப்படுகின்றது.

இதற்காக Acrobat போன்ற பிரத்தியேகமான மென்பொருட்கள் எவையும் நிறுவப்பட வேண்டியதில்லை.

எனினும் பெரும்பாலானவர்கள் Chrome PDF viewer - இனை பயன்படுத்துவதை காட்டிலும் PDF reader - களையே பயன்படுத்த விரும்புவர்.

எனவே குரோம் உலாவியில் காணப்படும் PDF viewer - இனை Disable செய்து கொள்ள முடியும்.

இதற்கு கூகுள் குரோம் உலாவியினை திறந்து இணைய முகவரி செலுத்தும் பகுதியில் Chrome://plugins என டைப் செய்யவும்.

அப்போது குறித்த உலாவியில் காணப்படும் Plug-ins அனைத்தும் தோன்றும். அதில் Chrome PDF Viewer என்பதில் காணப்படும் Disable எனும் இணைப்பினை கிளிக் செய்தால் போதும்.

இதன் பின்னர் ஒன்லைனில் காணப்படும் PDF கோப்புக்களை கிளிக் செய்யும்போது அவை நேரடியாகவே உங்கள் கணனிக்கு தரவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.

அதன் பின்னர் கணனியில் நிறுவப்பட்டுள்ள PDF reader - களை பயன்படுத்தி அக்கோப்புக்களினை இயக்க முடியும்.

Post a Comment

0 Comments