சிறுவர்களுக்கான நவீன பாதுகாப்பான தேடியந்திரங்கள

இன்றைய நவீன காலகட்டத்தில் 6 வயது முதலே இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

எனவே சிறுவர்களுக்கு ஏற்றாற் வகையில், பல தேடியந்திரங்கள் உள்ளன.

Aga-Kids

இந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.

தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என தெரிவு செய்து கொள்ளலாம்.

இதை தவிர கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.

அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

http://aga-kids.com/

இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.

இந்த தேடியந்திரம் கூகுளை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.

இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.

http://www.kidrex.org/

கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.

http://kidsclick.org/

Ask Kids

ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

http://www.askkids.com/

Post a Comment

0 Comments