Velocity Micro: புதிய வடிவமைப்பி​ல் உருவான கணனி

கணனிக்குரிய அனைத்து விதமான அம்சங்களையும் உள்ளடக்கியதாக மிகவும் மெலிதான வடிவமைப்பில் Velocity Micro எனும் கணனி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மைக்ரோசொப்டின் பிந்திய பதிப்பான விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இக்கணனியானது 23.6 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixcel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Processor - களின் அடிப்படையில் 3 வகையான பதிப்புக்களாக வெளிவருகின்றன.
அவையாவன 3.30 GHz வேகத்தில் செயலாற்றும் Intel Core i3-2120 dual-core processor, 2.9 GHz வேகத்தில் செயலாற்றும் Core i5-3470S quad-core processor மற்றும் 3.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Core i7-3770S quad-core processor ஆகியனவாகும். இவற்றுடன் பிரதான நினைவகமாக 8GB RAM - இனை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன.
இவற்றின் குறைந்த பெறுமதியானது 800 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments