Huawei அறிமுகப்படு​த்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்


இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்வதில் தனக்கென ஒரு இடத்தினை தக்கவைத்திருக்கும் Huawei நிறுவனம் Ascend D2 மற்றும் Ascend Mate எனும் இரு கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.Ascend D2 கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான Super Retina தொடுதிரையினை கொண்டுள்ளது.
மேலும்  1.5 GHz வேகத்தில் செயலாற்றும் quad-core CPU, 13 மெகாபிக்சல் கமெரா ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசி Android 4.1 Jellybean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Ascend Mate கைப்பேசியானது தற்போது காணப்படும் கைப்பேசிகளுள் மிகவும் பெரிய தொடுதிரையைக் கொண்ட கைப்பேசி என்ற தனித்துவத்துடன் அறிமுகப்படுத்தப்படுவதோடு (6.1 அங்குலம், 1280 x 720 Pixel Resolution)  மிகவும் நீடித்து உழைக்கக்கூடிய 4,050mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.
தவிர 1.5 GHz quad-core Processor, 8 MP Rear Camera ஆகியனவும் காணப்படுகின்றன. இக்கைப்பேசிகளும் Android 4.1 Jellybean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றன.

Post a Comment

0 Comments