விரைவில் LG அறிமுகப்படு​த்தும் Tab-Book H160


இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் LG நிறுவனமானது Tab-Book H160 எனும் மடிக்கணனிகளை ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரமளவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.Sliding QWERTY தொழில்நுட்பத்தில் அமைந்த Keyboard - இனை கொண்டுள்ள இந்த மடிக்கணினிகள் 11.6 அங்குல அளவுடைய திரை, Intel Atom Z2760 Clover Trail Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, மற்றும் 64GB Solid State Disk (SSD) துணை சேமிப்பு சாதனம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இவற்றுடன் USB port, HDMI port, microSD card slot, Bluetooth மற்றும் Wireless தொழில்நுட்பம் ஆகியனவும் காணப்படுகின்றன.
இம்மடிக்கணினிகளின் பெறுமதியானது 1395 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments