Dual Sim வசதியுடன் அறிமுகமாகி​ன்றது Galaxy Note II கைப்பேசி

கைப்பேசி உற்பத்தியில் புரட்சி செய்து வரும் Samsung நிறுவனமானது தற்போது Dual Sim வசதியுடன் கூடிய Galaxy Note II கைப்பேசிகளை அறிமுகப்படுத்த தயாராகின்றது.இம்மாதம் 24ம் திகதி முதன் முறையாக சீனாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இக்கைப்பேசிகளில் Dual Sim வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் ஒன்று GSM வலையமைப்பினைக் கொண்டதாகவும், மற்றையது CDMA வலையமைப்பைக் கொண்டதாகவும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுதல் விசேட அம்சமாகும்.
இவை தவிர 1280 x 720 Pixels Resolution உடையதும், 5.5 அங்குல அளவுடையதுமான Super AMOLED Multi-Touch தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor - இனையும் கொண்டுள்ளது.
மேலும் 8 Mexapixels உடைய பிரதான கமெரா மற்றும் 1.9 Mexapixels கொண்ட துணைக் கமெரா ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இவை 16GB, 32GB மற்றும் 64GB கொள்ளளவுடைய சேமிப்புக் கொள்ளவுடைய பதிப்புக்களாக வெளியிடப்படவுள்ளன.

Post a Comment

0 Comments