பேஸ்புக் போன்று கூகுள் பிளசிலும் Group வசதி

பேஸ்புக்கில் Group வசதி ஒரு குழுவாக நண்பர்கள் இணைந்து, தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.இதே போன்று தற்போது கூகுள் பிளசிலும் Group வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
Community என்று பெயரிட்டுள்ள இந்த வசதியின் மூலம், நண்பர்கள் குழுவாக இணைந்து தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும்.
மேலும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம்.
இதற்கு முதலில் உங்களுடைய கூகுள் பிளஸ் கணக்கில் உள்நுழைந்து, Community என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
பிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்து கொள்ளவும். இதில் public தெரிவு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் குழுவின் பெயர், குழுவிற்கான Logo, Description என அனைத்தையும் கொடுத்து Done editing என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான், உங்களுக்கான குழு உருவாக்கப்பட்டு விட்டது.

Post a Comment

0 Comments