அறிமுகமாகியது உலகின் மிக மெலிதான LaVie X 15.6 Ultrabook கணனிகள் |
இதுவரையான
காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கணனிகளை விடவும் மிகவும் மெலிதான
வடிவமைப்பினைக் கொண்ட LaVie X 15.6 Ultrabook எனும் கணனிகளை ஜப்பானின் NEC
நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படவல்ல
இக்கணனிகள் 1.9 GHz வேகத்தில் செயலாற்றும் Core i7-3517U Processor
மற்றும் பிரதான நினைவகமாக 4GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாக
காணப்படுகின்றது. அத்துடன் இவற்றின் துணைச்சேமிப்பு சாதனமானது Solid State Disk (SSD) தொழில்நுட்பத்தில் அமைந்ததும், 256GB கொள்ளளவு உடையதாகவும் அமைந்துள்ளது. மேலும் 12.8mm தடிப்பினை உடைய இக்கணனிகள் 1920 x 1080 Pixel Resolution கொண்ட 15.6 அங்குல அளவுடைய திரையினை கொண்டுள்ளன. இவற்றின் பெறுமதியானது 2,100 அமெரிக்க டொலர்கள் ஆகும். |
0 Comments