Karbonn அறிமுகப்படுத்தும் A30 கைப்பேசிகள்


இந்தியாவின் முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Karbonn ஆனது Dual SIM வசதியுடன் கூடிய A30 Smartphone - இனை அறிமுகப்படுத்துகின்றது.Android 4.0 Ice Cream Sandwich இங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த கைப்பேசிகள் 480x800 Pixels Resolution உடையதும், 5.9 அங்குல அளவுடையதுமான பெரிய தொடுதிரையினை கொண்டதாகக் காணப்படுகின்றன.
அத்துடன் 1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual Core Processor, 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன் இந்த நினைவகமானது Micro SD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் இவற்றில் காணப்படும் 2500 mAh மின்கலமானது 10 மணித்தியாலங்கள் வரையிலான தொடர்ச்சியான அழைப்பினை ஏற்படுத்தக்கூடியவாறும், Standby நிலையில் 600 மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தவிர LED flash, Auto Focus மற்றும் Face Detection உடன் கூடிய 8 மெகாபிக்சல் உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக்கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
இந்தியப் பெறுமதியில் 11,500 ரூபா உடைய இவற்றில் SIM 1 ஆனது 3G வலையமைப்பில் செயற்படக்கூடிவாறும் SIM 2 ஆனது 2G வலையமைப்பில் செயற்படக்கூடிவாறும் காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments